நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இரத்துச் செய்யப்பட வேண்டும் என்பதில் ஐக்கிய தேசியக் கட்சி உறுதியாகவுள்ளதாக பிரதியமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
அதுபோல, 2020ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் குறித்து தற்போது பேசுவது பொருத்தமற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்து பாராளுமன்றத்துக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு. மக்களுக்கு பொறுப்புக்கூறக் கூடிய பாராளுமன்றத்தை உருவாக்குவதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினதும் நோக்கம் என்றும் அஜித் பெரேரா மேலும் கூறியுள்ளார்.

0 Responses to நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இரத்துச் செய்யப்பட வேண்டும்; ஐ.தே.க உறுதி!