பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது நாட்டுக்கு பெரும் ஆபத்தைக் கொண்டு வரும் என்று பொது மக்கள் முன்னணியின் தலைவரும் கூட்டு எதிரணியின் முக்கியஸ்தருமான ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு புதிதாக கொண்டுவரப்படும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையினை பெற்றுக்கொள்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்பட்ட 58 நிபந்தனைகளில் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜீ.எல்.பீரிஸ் கூறியுள்ளதாவது, “ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையினைப் பெற்றுக்கொள்வது என்றால் தாங்கள் விதிக்கும் 58 நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்திருந்தது. இதனையும் அரசு ஏற்றுக்கொண்டது. ஆனால் அந்த 58 நிபந்தனைகளில் பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்குவைத்து தொடர்பிலேயே முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நாட்டினை ஆள்வது யார்? என்ற கேள்வி இங்கு நமக்கு எழுகின்றது. குறித்த விடயமானது நாட்டுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் ஒன்றாகவே கருத முடியும் ஏன் என்றால் அந்த முறைமை கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்திலும் கொண்டு வரப்பட்டது. இவ்வாறான நிபந்தனைகள் அன்றும் அவர்களால் முன்வைக்கப்பட்டிருந்தாலும் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எமக்கு நாட்டின் வளர்ச்சியே முக்கியமாக இருந்தது. ” என்றுள்ளார்.

0 Responses to பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது நாட்டுக்கு ஆபத்தானது: ஜீ.எல்.பீரிஸ்