ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி தொடர்பில், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரிச்சலுகையை இலங்கைக்கு மீண்டும் கிடைத்தது மிகப்பெரிய வெற்றி என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது, “ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் பெற்றுகொள்வதற்காக கடந்த இரு வருடங்களாக அரசாங்கம் முன்னெடுத்த தியாகங்களின் விளைவாகவே இந்த வெற்றி கிடைத்துள்ளது.
குறிப்பாக மனித உரிமைகளை பாதுகாப்பதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டமையால் இலங்கைக்கு இந்த வரிச்சலுகை கிடைத்துள்ளது. இது வெறுமனே நல்லாட்சி அரசாங்கத்துக்கு மாத்திரம் கிடைத்த வெற்றியல்ல. இலங்கையர்கள் அனைவருக்கும் கிடைத்த வெற்றி.” என்றுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்மொழியப்பட்ட மனித உரிமைகள், தொழில் சட்டங்கள், சுற்றாடல் பாதுகாப்பு, நல்லாட்சி ஆகிய விடயங்களின் கீழ் 27 சர்வதேச இணக்கப்பாடுகளை செயற்படுத்தவும் அமுல்படுத்தவும் இலங்கை இணக்கம் வெளியிட்டுள்ளதை கவனத்தில் கொண்டே, ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் இலங்கைக்கு வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

0 Responses to ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மீண்டும் இலங்கைக்கு கிடைத்தது மிகப்பெரிய வெற்றி: ரணில்