வடக்கில் அத்துமீறிய கைதுகளும், சட்டத்துக்குப் புறம்பான பாதுகாப்புப் படையினரின் கெடுபிடிகளும் இன்னமும் தொடர்கின்றன. அதாவது, வடக்கு மீதான பயங்கரவாதக் கண்ணோட்டம் இன்னமும் மாறவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கில் நீதியை சமமாகப் பெற்றுக் கொள்வதில் பாரிய தடைகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கனடா சென்றுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர், அங்கு இடம்பெற்றுள்ள நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே இதனைக் கூறியுள்ளார்.
மக்கள் வாழ்க்கையைக் கொண்டு செல்ல முடியாதளவுக்கு வடக்கில் வறுமை தலைதூக்கியுள்ள நிலையில், மாகாண சபைகள் தொடர்ந்தும் மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் செயற்பட வேண்டியுள்ளதால் அபிவிருத்தி நடவடிக்கைகளில் மத்திய அரசாங்கத்தை எதிர்ப்பார்த்தே காத்திருக்க வேண்டியுள்ளது. இது, அபிவிருத்திக்கு தடையாக அமைந்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to வடக்கு மீதான பயங்கரவாதக் கண்ணோட்டம் மாறவில்லை: சி.வி.விக்னேஸ்வரன்