ஜல்லிக்கட்டு நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அலங்காநல்லூரில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைப்பெறுகிறது.
இதில் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சிகள் பங்கேற்று உள்ளன. தமிழர் திருநாளான தைப்பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா ரேஸ் (மாட்டுவண்டி பந்தயங்கள்) போன்ற வீரவிளையாட்டுகள் தமிழகத்தில் பல ஆயிரம் ஆண்டுகளாக, பாரம்பரியமாக நடந்து வருகின்றன. இதில், காளைகள் துன்புறுத்தப்படுவதாக, விலங்குகள் நலவாரியம் தொடர்ந்த வழக்கில், கடந்த
2014, மே மாதம் தடை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதனால், கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.
ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் உச்சக்கட்டமாக திமுக பொருளாளரும், எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10.40 மணிக்கு மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் மாபெரும் ஆர்ப்பாட்டம்தொடங்கி உள்ளது.இதற்காக ஜல்லிக்கட்டு வாடிவாசல் அருகே பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமான திமுகவினர் பங்கேற்றுள்ளனர். காங்கிரஸ், பார்வர்டு பிளாக் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், ஜல்லிக்கட்டு அமைப்புகள் மற்றும் பொதுமக்களும் பங்கேற்கின்றனர். ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டம் அதிகமாக திரளும் என்பதால் சிறப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

0 Responses to ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி அலங்காநல்லூரில் ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம்