புதிய அரசியலமைப்பினை உருவாக்குவது தொடர்பிலான வழிநடத்தல் குழுவின் அறிக்கை சமர்ப்பிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய அரசியலமைப்பு பணிகள் இன்னமும் சில காலம் நீடிக்கும் என்று கூறப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றுக்குள் புதிய அரசியலமைப்பில் என்ன விடயங்களை உள்ளடக்குவது என்பது தொடர்பில் எழுந்துள்ள முரண்பாடுகளை அடுத்தே இந்த இழுபறி நீடிக்கின்றது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை முற்றாக நீக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தி வருகின்றது. ஆனாலும், அதற்கு சுதந்திரக் கட்சி தன்னுடைய எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றது.
அத்தோடு, புதிய அரசியலமைப்பு நிறைவேற்றம், பொது வாக்கெடுப்பு மூலம் இறுதி செய்யப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தி வருகின்றது. அதிலும், சுதந்திரக் கட்சிக்கு உடன்பாடு இல்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to புதிய அரசியலமைப்பு பணிகள் குழப்பங்களுடன் நீடிப்பு!