முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவு கூர்ந்தமைக்காக ‘மே 17’ இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 08ஆம் திகதி முற்பகல் 11.00 மணியளவில் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
குறித்த போராட்டம் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளதாவது, “’கடந்த மே மாதம் 21ஆம் திகதி தமிழ் நாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடாத்துவதற்கு திருமுருகன் காந்தி உட்பட மே 17 அமைப்பை சார்ந்தவர்களும் பொது மக்களும் தீர்மானித்திருந்தனர்.
இதற்கு தமிழக அரசு தடை விதித்திருந்த நிலையில் அதனையும் மீறி நினைவேந்தலை நடாத்தியமையாலேயே திருமுருகன் காந்தி உட்பட தமிழர் விடியல் கட்சியின் தலைவர் செயற்பாட்டாளர்கள் இருவர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்படும் கவணயீர்ப்பு போராட்டத்தில், ஜெனீவா மனிதவுரிமை பேரவையிலே இடம்பெற்றது தமிழ் மக்களுக்கு ஏமாற்றமளிக்கப்பட கூடிய விடயம் என்பதையும், அங்கே தமிழர்களுக்கு எதிராக நடாத்தப்பட்ட ஏமாற்று நாடகத்தின் உண்மையை அம்பலப்படுத்திய அனைத்து தரப்பினரும் இதில் கலந்துகொள்ள வேண்டும்.
அதே சமயம் இதில் ஜெனீவா மனிதவுரிமை பேரவையில் தமிழர்களுக்கு எதிரான அவர்களை ஏமாற்றுகின்ற நாடகத்திற்கு ஆதரவழித்து அதனை அரகேற்றிய எவரும் பங்குபற்றக் கூடாது. இவ் கவனயீர்ப்பு போராட்டத்தை யாழ். இந்திய தூதுரகத்திற்கு முன்பு அல்லது யாழ்.மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பு நடாத்துவதற்கு ஆலோசித்துவரும் நிலையில் அது தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும்.” என்றுள்ளார்.

0 Responses to திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 08ஆம் திகதி போராட்டம்!