சமூக, பொருளாதார மற்றும் கலாசார உரிமைகள் உள்ளடங்கிய விரிவான உரிமைகள் சட்டமூலமொன்றைக் கடைப்பிடிக்குமாறு, இலங்கையிடம் ஐக்கிய நாடுகள் வலியுறுத்தியுள்ளது.
குறித்த உரிமைகள், ‘மனித உரிமைகளோடு சம்பந்தப்பட்டவை. ஒன்றில் ஒன்று தங்கியிருப்பவை’ என்றும் ஐக்கிய நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளது.
சமூக, பொருளாதார மற்றும் கலாசார உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகள் குழு, குறித்த உரிமைகள் பற்றிய சர்வதேச ஒப்பந்தங்கள் தொடர்பில் இலங்கை மீதான 5வது ஆவர்த்தன அறிக்கையை கருத்தில் எடுத்தது.
தற்போது அநேக பொருளாதார மற்றும் சமூக விடயங்கள், அரசியலமைப்பின் அரச கொள்கையின் வழிகாட்டல் தத்துவங்களுக்குள் மட்டுப்படுத்திப்பட்டிருப்பதையிட்டு விசனப்படுவதாக, இந்தக் குழு நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் குழுவின் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “அரசியலமைப்பின் 29வது பிரிவின்படி இந்த வழிகாட்டல் தத்துவங்கள், சட்ட அல்லது கடப்பாடு என்பவற்றை அரசாங்கத்தின் மீது கொண்டனவையல்ல. இவை எந்த நீதிமன்றாலும், அமுலாக்கும்படி வலியுறுத்தப்பட முடியாதவை.
பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகளை அடக்கிய விரிவான ஓர் உரிமைகள் சட்டமூலத்தை கொண்டுவருதல் உட்பட அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயன்முறையை இலங்கை விரிவுபடுத்த வேண்டும். புதிய அரசியலமைப்பில் சுயாதீனமான அமைப்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அமைய வேண்டும்.
அரசாங்கமானது, மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு போதுமான வளங்களை உறுதி செய்து அதன் பரிந்துரைகளை பொருத்தமான அரச நிறுவனங்கள் முறையாக தமது கவனத்துக்கு எடுக்க வேண்டும். அரசாங்கம், நீதிபதிகள், சட்டவுரைஞர்கள் சுயாதீனம் பற்றிய 2017 விசேட அறிக்கையாளரின் பரிந்துரைளை கவனத்தில் எடுக்க வேண்டும். இதன்மூலம் நீதித்துறையின் முழு சுயாதீனம் உறுதி செய்யப்படும்.” என்றுள்ளது.

0 Responses to சமூக, பொருளாதார, கலாசார உரிமைகளைக் கடைப்பிடிக்குமாறு இலங்கைக்கு ஐ.நா. வலியுறுத்தல்!