காணாமல் போனோரின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் உருவாக்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள அலுவலகம் தொடர்பான சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம், எதிர்வரும் 22ஆம் திகதி நாடாளுமன்றில் வாக்கெடுப்பிற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சட்டத்திருத்தம் நிறைவேற்றப்படும் பட்சத்தில், வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு, காணாமல் போனோர் தொடர்பாக அலுவலகம் நிறுவப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி வழங்கும் பொறிமுறையின் ஒரு அம்சமான காணாமல் போனோர் தொடர்பான அலுவகத்தை அமைப்பது குறித்த சட்டவரைபு, கடந்த 2016ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. எனினும், குறித்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் வகையிலான மக்கள் விடுதலை முன்னணியின் யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருந்த நிலையில், சட்டத்திருத்தம் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
காணாமல் போன தமது உறவுகள் பற்றிய உண்மை நிலையறியாது வடக்கு கிழக்கின் பல பிரதேசங்களில் தொடர் போராட்டஙக்ள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தையேனும் நிறுவுவதற்கு அரசாங்கம் தயக்கம் காட்டி வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டு வந்த நிலையில், இது தொடர்பான அடுத்த நகர்வு முன்னெடுக்கப்படவுள்ளது.

0 Responses to காணாமல் போனோர் அலுவலக சட்டத்தில் திருத்தம்! – விரைவில் வாக்கெடுப்பு