“அமைச்சுப் பதவியை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனே எனக்கு வழங்கினார். அவர் கோரினால் பதவியிலிருந்து நான் விலகுவேன்.” என்று வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
“பொய்யான குற்றச்சாட்டுக்களுடன் பதவி விலகினால் தலைமுறை தாண்டியும் இழிசொற்களுக்கு உள்ளாக நேரிடும். ஊழல் மோசடியில் ஈடுபட்டதாக என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் யாவும் திட்டமிட்ட சதி. விசாரணைக் குழுவில் சூழ்ச்சி உள்ளது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை மீது மாகாண சபையில் தற்போது (இன்று புதன்கிழமை) விசேட விவாதம் இடம்பெற்று வருகின்றது. அங்கு தன்னிலை விளக்கம் அளித்து உரையாற்றும் போதே பொன்னுத்துரை ஐங்கரநேசன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்களை அடுத்து முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு, விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் மற்றும் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா ஆகியோரை குற்றவாளிகளாக அடையாளப்படுத்தியிருந்தது சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to முதலமைச்சர் கூறினால் பதவி விலகுவேன்; வடக்கு மாகாண சபை விசேட அமர்வில் ஐங்கரநேசன் தெரிவிப்பு!