“தமிழகத்தில், 'பிளாஸ்டிக்' அரிசி, ‘பிளாஸ்டிக்’ முட்டை போன்ற போலி உணவுப்பொருட்களுக்கு இடமில்லை அவற்றை விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவை மாநிலத்திற்குள் வராமல் தடுக்க, தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.” என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, “தமிழகத்தில், அரிசி பஞ்சம் இல்லை. மத்திய அரசிடமிருந்து, மாதத்திற்கு, 2.96 இலட்சம் டன் அரிசியை, விலை கொடுத்து வாங்கி, இலவசமாக வழங்குகிறோம். கூடுதல் தேவை என்றால், தேவைக்கேற்ப, 26 ஆயிரம் டன் அரிசி வாங்கப்படுகிறது. ரேஷன் கடைகளில், 3.14 இலட்சம் டன் அரிசி வழங்கப்படுகிறது. ஒரு கிலோ அரிசி, 20 ரூபாய்க்கு வழங்கும் திட்டமும் தொடர்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை, அரிசி பற்றாக்குறைக்கு இடமில்லை. 'ஒரிஜனலில்' பிரச்னை இருந்தால் தான், 'டூப்ளிகேட்' வரும். அரிசி தட்டுப்பாடு இல்லாததால், பிளாஸ்டிக் அரிசி என்ற பேச்சுக்கே இடமில்லை.
பிளாஸ்டிக் அரிசி குறித்து புகார்கள் வந்தால், உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரிசி முறையான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே வாங்கப்படுகிறது.தனியார் யாரும், பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை போன்றவற்றுக்கு, தமிழகத்தில் இடமில்லை. எனினும், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்.” என்றுள்ளார்.

0 Responses to தமிழகத்தில், 'பிளாஸ்டிக்' அரிசிக்கு இடமில்லை: காமராஜ்