தமிழ் மக்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்படுவதை கண்ணை மூடிப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு செம்மொழி மாநாட்டினை நடத்துவதால் மட்டும் தமிழ் மொழி வாழ்ந்துவிடாது என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கையில் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது, தமிழகத்தில் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டதாக சுட்டிக்காட்டிய மனோ கணேசன், தமிழ் மொழியை வாழ வைக்க வேண்டுமானால், முதலில் தமிழ் மக்கள் வாழ வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
“சிறுபான்மையினராக வாழும் தமிழ் மக்கள் சற்று அசந்துவிட்டால், அவர்களை ஆட்கொண்டு விடுவார்கள். தாய் மொழி, கலாசாரம், இனம், பண்பாடு, வரலாற்றை மறந்துவிட்டுத்தான் நாட்டில் ஒற்றுமையை உருவாக்க வேண்டும் என்றால், அப்படியொரு ஒற்றுமை எமக்கு வேண்டாம். நாடு இல்லை என்பதற்காக தமிழ் மக்களை நாதியற்றவர்கள் என்று நினைத்துவிட வேண்டாம்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

0 Responses to தமிழர்கள் கொல்லப்படுவதை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு செம்மொழி மாநாடு நடத்துவதால் பயனில்லை: மனோ கணேசன்