இழுவை மடி (பொட்டம் ட்ரோலிங்) முறையிலான மீன்பிடி முறை தடை செய்யப்படுவதால், அதனை மீறி செயற்படுவர்களுக்கு ஆகக் குறைந்தது 50,000 ரூபாய் தண்டப்பணம் அறவிப்படும் அல்லது இரண்டு வருட சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இழுவை மடி முறை தடைசெய்யப்படுவதால் பிடிக்கப்படும் மீன்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், எதிர்காலத்துக்கான கடல் வளத்தைப் பாதுகாத்து மீன் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கடற்றொழில் நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பான விவாதத்தை பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இழுவை மடி தொழிலை தடை செய்வது தொடர்பான தனிநபர் சட்டமொன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சமர்ப்பித்திருந்தார். இதனை ஏற்றுக் கொண்டு அரசாங்கம் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்திருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டினார்.

0 Responses to இழுவை மடி (பொட்டம் ட்ரோலிங்) மூலம் மீன்பிடித்தால் இரண்டு வருட சிறை அல்லது 50,000 ரூபாய் தண்டம்!