யாழ்ப்பாணம் மயிலிட்டித் துறைமுகம் மற்றும் அதனை அண்மித்த 54 ஏக்கர் காணிகள் கடந்த 03ஆம் திகதி பொதுமக்களிடம் கைளிக்கப்பட்ட நிலையில், குறித்த நிகழ்விற்கு தன்னை ஏன் அழைக்கவில்லை என்று யாழ். மாவட்டச் செயலாளர் என்.வேதநாயகத்திடம் விளக்கம் கோரி வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடிதம் எழுதியுள்ளார்.
மாகாணத்தின் காணி விவகாரம் தனக்குரியது என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், 27 ஆண்டுகளுக்குப் பின்னர் மயிலிட்டித் துறைமுகம் உள்ளிட்ட காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட நிலையில், ஏன் தன்னை அழைக்கவில்லை என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
அத்தோடு, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலான கூட்டத்திற்கும் தன்னை ஏன் அழைக்கவில்லை என்றும் யாழ். மாவட்டச் செயலாளரிடம் முதலமைச்சர் விளக்கம் கோரியுள்ளார்.

0 Responses to ‘மயிலிட்டித் துறைமுக விடுவிப்பு நிகழ்விற்கு என்னை ஏன் அழைக்கவில்லை?’; யாழ். மாவட்டச் செயலாளரிடம் முதலமைச்சர் கேள்வி!