Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் 272 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க.வின் வெங்கையா நாயுடு வெற்றி பெற்றுள்ளார். வெங்கையா நாயுடு 516 வாக்குகளும், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கோபாலகிருஷ்ண காந்தி 244 வாக்குகளும் பெற்றனர். இதனையடுத்து 272 வாக்குகள் வித்தியாசத்தில் வெங்கையா நாயுடு வெற்றி பெற்றதாக அறவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாட்டின் 15வது குடியரசு துணைத் தலைவராக வெங்கையா நாயுடு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தல் கடந்த மாதம் 17ஆம் தேதி நடந்து முடிந்தது. இதில் பா.ஜ.க. வேட்பாளர் ராம் நாத் கோவிந்த் வெற்றி பெற்றார்.

இந்த சூழலில் ஹமீத் அன்சாரி பதவிக்காலம் வருகிற 10ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே புதிய குடியரசுத் துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான வாக்குபதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

பா.ஜ.க கூட்டணி சார்பில் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, காங்கிரஸ் உள்ளிட்ட 18 எதிர்கட்சிகள் சார்பில் காந்தியின் பேரனும் மேற்கு வங்க முன்னாள் கவர்னருமான கோபால கிருஷ்ண காந்தி போட்டியிட்டனர்.

கட்சி வேறுபாடு இன்றி எம்பிக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். மொத்தம் 785 வாக்குகளில் 771 வாக்குகள் பதிவாகியுள்ளது. இதில் 11 வாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: 272 வாக்குகள் வித்தியாசத்தில் வெங்கையா நாயுடு வெற்றி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com