ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66வது ஆண்டு விழாவுக்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று அந்தக் கட்சியின் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்தோடு, கூட்டு எதிரணியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கும் இந்த ஆண்டு விழாவுக்கான அழைப்பிதழ்கள் கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோட்டை பகுதியிலுள்ள பௌத்த விகாரையொன்றில் இடம்பெற்ற நிகழ்வுக்குப் பின்னர் அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to சுதந்திரக் கட்சியின் 66வது ஆண்டு விழாவுக்கு எனக்கு அழைப்பில்லை: மஹிந்த