சந்தேகநபர்கள் முன்னாள் போராளிகள் என்பதற்காக தொடர்ந்தும் தடுத்து வைப்பது அடிப்படை மனித உரிமை மீறலாகும் என்று யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய திட்டம் தீட்டினார்கள் என்கிற பெயரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஐவரும் நேற்று செவ்வாய்க்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
குறித்த வழக்கு விசாரணை யாழ். மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற போதே, “சந்தேகத்தில் கைது செய்யப்படும் அனைவரும் குற்றவாளிகளாக கருதப்பட வேண்டியவர்கள் இல்லை. சந்தேகநபர்கள் முன்னாள் போராளிகள் என்பதற்காக தொடர்ந்தும் தடுத்து வைப்பது அடிப்படை மனித உரிமை மீறலாகும்” என்ற விடயத்தை நீதிபதி மா.இளஞ்செழியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 Responses to சந்தேகநபர்கள் முன்னாள் போராளிகள் என்பதற்காக தொடர்ந்தும் தடுத்து வைக்க முடியாது: மா.இளஞ்செழியன்