பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள வி.கே.சசிகலாவுக்கு எந்தவிதமான சிறப்புச் சலுகைகளும் அளிக்கப்படவில்லை என்று கர்நாடக அரசு விளக்கமளித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைபெற்ற சசிகலா, இளவரசி உள்ளிட்டோர் சிறையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுவதாக சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா, கடந்த ஜூலை மாதத்தில் புகார் தெரிவித்தார்.
சிறைத்துறை ஐ.ஜி-க்கு அனுப்பிய புகார் கடிதத்தில், சசிகலாவுக்குச் சிறப்புச் சலுகைகள் அளிப்பதற்காக சிறைத்துறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி வரை இலஞ்சம் கொடுக்கப்பட்டதாகப் பேசப்படுவதாகவும் ரூபா கூறியிருந்தார்.
இந்த விவகாரம், தேசிய அளவில் பெரும் புயலைக் கிளப்பிய நிலையில், டி.ஐ.ஜி மற்றும் ஐ.ஜி இருவருமே பணியிட மாற்றம் செய்யப்பட்டதோடு, உயர்மட்ட அளவிலான விசாரணைக்கும் கர்நாடக அரசு உத்தரவிட்டது.

0 Responses to சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படவில்லை: கர்நாடக அரசு விளக்கம்!