தமிழக அரசியல் நெருக்கடிக்கு ஆளுநர் தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க.வின் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்கம் செய்தது ஜனநாயக விரோத நடவடிக்கை என்று மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை நிறைவேற்றிய சபாநாயகர் தனபால் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளதாவது, “குறுக்குவழியில் ஆட்சியை தக்கவைக்கதுடிக்கும் பழனிசாமியும் இராஜினாமா செய்ய வேண்டும். குதிரைபேர அ.தி.மு.க அரசை வீழ்த்த சட்டரீதியான ஜனநாயகநீதியாக போராடவும் தி.மு.க. முடிவு செய்துள்ளது. மக்கள் வரிப்பணத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கூட்டம் நடத்தியுள்ளனர். மக்கள் வரிப்பணத்தில் நடத்தும் கூட்டத்தில் தி.மு.க.வை விமர்சிப்பது தவறாகும்.” என்றுள்ளார்.

0 Responses to தமிழக அரசியல் நெருக்கடிக்கு ஆளுநரே முழுப்பொறுப்பு: மு.க.ஸ்டாலின்