“யுத்தமும், சத்தம் இல்லை என்பதால் பிரச்சினை தீர்ந்துவிட்டது என்று அர்த்தமில்லை. இந்த நாட்டில் யுத்தம் முடிந்துள்ளதாக கூறப்பட்டாலும், அந்த யுத்ததிற்கான மூல காரணம் அப்படியே உள்ளது. அதற்கு எந்த முடிவும் காணப்படவில்லை.” என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் தேசிய சகவாழ்வு மற்றும் அரச கருமொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தேசிய சகவாழ்வு மற்றும் அரச கருமொழிகள் அமைச்சினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடமாடும் சேவையின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான நடமாடும் சேவை நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்பில் ஆரம்பமானது.
இதன் ஆரம்ப நிகழ்வு களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெற்றது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே மனோ கணேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “மட்டக்களப்பு மாவட்டம் கடந்த காலங்களில் சொல்லொண்ணா துன்பங்களை எதிர்கொண்ட மாவட்டம். பெரும் பிரச்சினைகளை எதிர்கொண்ட மாவட்டம். யுத்தம் முடிவடைந்தாலும், அந்த யுத்ததிற்கான அடிப்படை காரணங்களும் மூல காரணங்களும் உள்ளது. அதற்கு எந்த முடிவும் காணப்படவில்லை. யுத்தம் இல்லை, சத்தமில்லையென்றால் பிரச்சினை முடிந்துவிட்டது என்று அர்த்தம் இல்லை. யுத்தம்தான் இல்லை. பிரச்சினையிருக்கின்றது. அந்த பிரச்சினைகளுக்கு நாங்கள் படிப்படியாக தீர்வினை கண்டுவருகின்றோம்.” என்றுள்ளார்.

0 Responses to யுத்தமும் சத்தமும் இல்லை என்பதால், பிரச்சினை தீர்ந்துவிட்டது என்று அர்த்தமில்லை: மனோ கணேசன்