“அரசாங்கத்தை விட்டு வெளியேறி மஹிந்த ஆதரவு அணியுடன் கூட்டு சேரப்போவதாக கூறியவர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு கட்சியைப் பலப்படுத்துவதற்கான பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டுள்ளனர்.” என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மீன்பிடி அமைச்சில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதி தலைமையிலான கூட்டத்தில் கட்சியைப் பலப்படுத்துவதற்கான பல வேலைத்திட்டங்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதாகவும், அதற்காக நியமிக்கப்பட்ட பல குழுக்களின் முக்கிய பொறுப்புக்களை மஹிந்த அணியுடம் இணையப் போவதாகக் கூறிவந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இக்கூட்டத்தில் தேர்தல் குழு, மறுசீரமைப்புக்குழு, பொருளாதாரக் குழு, பிரசாரக்குழு, வேட்பாளரை தெரிவு செய்யும் குழு ஆகியன நியமிக்கப்பட்டதாகவும். இதற்கான முக்கிய பொறுப்புக்களையே அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

0 Responses to மஹிந்தவுடன் இணையப்போவதாகக் கூறியவர்கள் மீண்டும் மைத்திரியுடன்: மஹிந்த அமரவீர