“டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் கூறுவதுபோல நாங்கள் யாரும் ஸ்லீப்பர் செல்கள் கிடையாது. ஜெயலலிதாவின் விசுவாசிகள்.” என்று அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம் அளித்தார்.
திருப்பூர் மாவட்ட கூட்டுறவு துறை ஆய்வு கூட்டம், திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடந்தது. இதில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது, “மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் மட்டும் ரூ.2 ஆயிரத்து 500 கோடிக்கு பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் யாரும் சென்று பார்க்க கூடிய வகையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எளிமையாக உள்ளார். டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் சொல்வதுபோல நாங்கள் ஸ்லீப்பர் செல் கிடையாது. நாங்கள் ஜெயலலிதாவின் விசுவாசிகள். முத்தலாக் விவகாரத்தில் அதிமுக நிலைப்பாடு பற்றி எனக்கு தெரியாது. இதுபற்றி சட்ட அமைச்சரிடம் கேளுங்கள்.” என்றுள்ளார்.

0 Responses to நாங்கள் யாரும் டி.டி.வி.தினகரனின் ஸ்லீப்பர் செல்கள் கிடையாது: செல்லூர் ராஜூ