“தமிழக மண் திராவிட இயக்கத்தின் மண். பெரியார், அண்ணா, கருணாநிதியால் பண்பட்டது தமிழக மண். யாராலும் திராவிடத்தை அழிக்க முடியாது. திராவிட இயக்கத்தை அழிக்க நினைப்பவர்கள் தோற்றதுதான் வரலாறு.” என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியை நடிகர் ரஜினிகாந்த் நேற்று மாலை கோபாலபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். இதன்போது, மு.க.ஸ்டாலினும் உடனிருந்தார். இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஸ்டாலின் மேலும் கூறியுள்ளதாவது, “தி.மு.க. தலைவர் கருணாநிதியை ரஜினி சந்திப்பது புதிதல்ல. இதில் அதிசயப்பட ஒன்றுமில்லை. சந்திப்பின்போது அரசியல் கட்சி தொடங்குவதற்கு ஆசி பெற வந்ததாக ரஜினி தெரிவித்தார். புதிய கட்சி துவங்கும்போது விஜயகாந்தும் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றார். திராவிட கலாசாரம், பண்பாட்டின் அடிப்படையில் கருணாநிதியும் வாழ்த்தினார்.
திராவிட இயக்கத்தை அழித்துவிடலாம் என சிலரின் தூண்டுதல் இருப்பதாக கூறப்படுகிறது. தமிழக மண் திராவிட இயக்கத்தின் மண். பெரியார், அண்ணா, கருணாநிதியால் பண்பட்டது தமிழக மண். யாராலும் திராவிடத்தை அழிக்க முடியாது. திராவிட இயக்கத்தை அழிக்க நினைப்பவர்கள் தோற்றதுதான் வரலாறு. ரஜினி ஏற்கனவே ஆன்மீக அரசியல் நடத்த போவதாக தெரிவித்துள்ளார். ரஜினி ஆதரவு கேட்பாரா, வழங்கப்படுமா என்பது தேர்தல் நேரத்தில் எடுக்கப்பட வேண்டிய முடிவு.” என்றுள்ளார்.

0 Responses to தமிழக மண் திராவிட இயக்கத்தின் மண்; யாராலும் அழிக்க முடியாது: மு.க.ஸ்டாலின்