பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியால் (மஹிந்த அணி) முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 14 அமைச்சர்கள் வாக்களித்தனர்.
இதில், 5 அமைச்சரவை அமைச்சர்களும், 4 இராஜாங்க அமைச்சர்களும் மற்றும் 5 பிரதியமைச்சர்களும் அடங்குகின்றனர்.
அமைச்சரவை அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, தயாசிறி ஜயசேகர, சந்திம வீரக்கொடி, எஸ்.பி.திசாநாயக்க, ஜோன் செனவிரட்ன ஆகியோரும், இராஜாங்க அமைச்சர்களான லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன, டிலான் பெரேரா, ரி.பி.ஏக்கநாயக்க, சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே ஆகியோரும் பிரதி அமைச்சர்களான சுமேதா ஜி.ஜயசேன, அநுராத ஜயரட்ன, சுசந்த புஞ்சிநிலமே, லக்ஷ்மன் வசந்த சேனாநாயக்க, தாரக்க பஸ்நாயக்க ஆகியோருமே நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளித்த அமைச்சர்களாவர். எனினும், சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 20 அமைச்சர்கள் வாக்களிப்பில் பங்கேற்றிருக்கவில்லை.

0 Responses to ரணிலுக்கு எதிராக சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 14 அமைச்சர்கள் வாக்களிப்பு!