தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றி பேசாமல், வடக்கிலுள்ள அரசியல்வாதிகளுக்கு அரசியல் செய்யத் தெரியாது என்று கூட்டு எதிரணி (மஹிந்த அணி) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
“தேர்தல்களின் போது, விடுதலைப் புலிகளின் பாடல்களை பிரசாரக் கூட்டங்களில் ஒலிக்கவிடுவது, அவர்களைப் பற்றிப் பேசுவது, அவர்களின் நினைவுச் சின்னங்கள் தொடர்பில் பேசுவது என்று வடக்கிலுள்ள அரசியல்வாதிகள், புலிகளைப் பற்றியே பேசி அரசியல் செய்து கொண்டிருக்கின்றார்கள்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே நாமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “வடக்கு மக்களுக்கு அபிவிருத்திகளைப் பெற்றுத்தருகின்றோம். வேலை வாய்ப்புகளைப் பெற்றுத்தருகின்றோமென அவர்களை முன்னேற்றும் விதமான நடவடிக்கைகளை முன்னெடுக்க மாட்டார்கள். அது தொடர்பில் பேச மாட்டார்கள். வடக்கு மக்களை அபிவிருத்தி அடையாத மக்களாகவே வைத்திருக்க முயல்கின்றார்கள்.
இங்குள்ள அரசியல்வாதிகளின் பிள்ளைகள் வடக்கில் கல்வி கற்கவில்லை. அவர்களுக்கு வடக்குப் பற்றித் தெரியுமோ தெரியாது. பலர் வெளிநாடுகளில் கல்வி கற்கின்றார்கள். இங்குள்ள அரசியல் தலைவர்கள் யாரும் வடக்கு மக்களை முன்னேற்ற வேண்டுமென முயற்சிப்பதில்லை. தமது குடும்பங்களை மாத்திரம் முன்னேற்றுவதற்கு உழைக்கின்றார்கள்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் வடக்கின் வசந்தம் எனும் பெயரில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் செலவு செய்து அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்தோம். ஆனால், இன்று வடக்கில் எந்தவிதமான அபிவிருத்தி முன்னெடுக்கப்பட்டுள்ளது? எத்தனை பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன? எந்தவிதமான அபிவிருத்தித் திட்டங்களையும் இந்த அரசாங்கம் முன்னெடுக்கவில்லை.
இந்த நாட்டில் மீண்டும் யுத்தம் நடந்தால் அதில் சண்டையிட்டு நாட்டின் இளைஞர்கள், யுவதிகளே உயிரிழக்கப் போகின்றனர். இந்த மக்களே மீண்டும் அவ்வாறானதொரு சூழல் உருவாக விடமுடியாது. நாங்கள் எக்காலத்திலும் தீவிரவாதிகளுடன் இணைந்து அரசியல் செய்ததில்லை. அவர்களை நாங்கள் எப்போதும் ஆதரித்ததும் இல்லை. அதனால், தீவிரவாதிகளை நாம் எப்போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அவர்களை ஆதரிப்பவர்களையும் ஏற்க மாட்டோம்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் நாட்டு மக்களுக்குப் பொய்களைக் கூறியே, ஆட்சியமைத்தனர். மஹிந்த அணியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதனை நேரம் வரும் போது மஹிந்த ராஜபக்ஷ அறிவிப்பார். அதுவரையிலும் பொறுமையாக இருக்க வேண்டும். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வயதும் காலமும் எனக்கில்லை.” என்றுள்ளார்.

0 Responses to தமிழீழ விடுதலைப் புலிகளைப் பற்றிப் பேசாமல் வடக்கில் யாரும் அரசியல் செய்வதில்லை: நாமல் ராஜபக்ஷ