தற்போதுள்ள அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் பிரதமர் பதவியைத் தான் ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றார். கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியுடனான பேச்சுக்களின் போதும் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையிலேயே, பிரதமர் பதவியைத் தற்போது தான் ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இந்த நேரத்தில் பிரதமரின் பதவியை ஏற்றுக்கொள்ளும் நோக்கம் இல்லை. ஆனால், எதிர்கால பாராளுமன்றத் தேர்தலில் ஐ.தே.க.வின் கட்சியின் பிரதமர் வேட்பாளராக இருக்கக் கூடும். எனினும், அதுபற்றி கட்சியின் செயற்குழு தான் முடிவு செய்யும். கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க வேண்டும் என்பதே கட்சியின் உறுதியான நிலைப்பாடு.” என்றுள்ளார்.

0 Responses to பிரதமர் பதவியை ஏற்கமாட்டேன்: சஜித் பிரேமதாச