முரளி படத்தில் நடிப்பதற்காக விஜய் சேதுபதியை பாராட்டி வாழ்த்து தெரிவித்த முதல் நபர் நாமல் ராஜபக்சா.
எதிரி உன்னை பாராட்டி புகழ்கிறான் எனில் நீ அவனுக்கு சோரம் போய்விட்டாய் என்று அர்த்தம்.
இனி என்ன அடுத்து மகிந்த ராஜபக்சா வேடம் போட்டும் விஜய் சேதுபதி நடிக்கலாம்.
அதையும் பக்கா உருவ பொருத்தம் என்று பாராட்ட நாலு பேர் இருப்பார்கள்.
எனவே இதுவரை தமிழ் மக்களின் செல்வனாக இருந்த விஜய் சேதுபதி இனி ராஜபக்சேவின் செல்வனாக இருப்பார்.
ஆனால் தமிழ் மக்கள் இதை எல்லாம் பார்த்துக் கொண்டு பொறுமையாக இருப்பார்கள் என்று நினைக்க வேண்டாம்.
சேதுபதிக்கு மட்டும்மன்றி சேதுபதி மூலம் தமிழர்களுக்குள் ஊடுருவ முயலும் மகிந்த ராஜபக்சே அரசியலுக்கும் தகுந்த பதில் அளிக்கப்படும்.
ஒரு படத்திற்கு பதில் அளிக்க முடியாத அளவிற்கு தமிழ் தேசியம் ஒன்றும் பலவீனமானது அல்ல.
FB: Tholar Balan
0 Responses to ராஜபக்சேவின் செல்வன்!