அம்பாறைப் பகுதியில் மாணவி கற்பழிக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புள்ள நபரொருவரை அப்பிரதேச மக்கள் தாமே கொன்றுள்ளனர்.
நேற்று முன் தினம் மாலையில் அம்பாறை மத்தியமுகாம் 4ம் கொலனிப் பகுதியில் பாடசாலை மாணவியொருவர் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ள சம்பவம் பற்றி அதிர்வு இணையம் செய்தி வெளியிட்டிருந்தது.
4ம் கொலனி வாணி வித்தியாலய 7ம் வகுப்பு மாணவி மோகன் மனோதுஸ்டிகா (வயது 13) இவ்விதம் குரூரமான முறையில் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டார். அவர் சம்பவதினம் முட்டை விற்பதற்காக அருகிலுள்ள சிங்களக் கிராமமான 3ம் கொலனிக்குச் சென்றுவிட்டு திரும்பி. வரும் வழியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றது.
இச்சம்பவத்துடன் தொடர்புள்ள நபரொருவரை அக்கிராம மக்கள் நேற்று மாலையில் ஆத்திரத்துடன் கொலை செய்ததாக இன்றைய செய்திகள் கூறுகின்றன. இவ்வாறு மக்கள் சட்டத்தைத் தமது கைகளில் எடுத்து கற்பழிப்பு மற்றும் கொலை குற்றவாளி நபருக்கு தண்டனை நிறைவேற்றியுள்ளதால் அப்பகுதியில் தொடர்ந்தும் பதட்டம் நீடித்துள்ளது.
அம்பாறையில் மாணவி கர்ப்பழித்து படுகொலை; கற்பழித்தவனை மக்கள் அடித்து கொலை செய்துள்ளனர்
பதிந்தவர்:
தம்பியன்
24 July 2009
0 Responses to அம்பாறையில் மாணவி கர்ப்பழித்து படுகொலை; கற்பழித்தவனை மக்கள் அடித்து கொலை செய்துள்ளனர்