வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் வைக்கப்பட்டுள்ள அகதிகள் மத்தியில் ஊடுருவியுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் கண்டுபிடிக்கப்பட்டு முற்றாக வேர் அறுக்கப்படும் வரையில் இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியமர்த்தப்படமாட்டார்கள் என அனர்த்த முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்திருக்கின்றார்.
வடபகுதியில் உள்ள முகாம்களை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் கொழும்பு திரும்பியுள்ள அமைச்சர், அது தொடர்பாக நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் விளக்கமளித்தார்.
முகாம்களில் உள்ளவர்களின் அடிப்படைத் தேவைகளை வழங்குவதில் அரசு முடிந்தளவுக்கு அனைத்தையும் செய்யும் எனவும் தெரிவித்த அவர், மனித உரிமைகள் விடயத்திலும் தான் கவனம் செலுத்துவதாகக் குறிப்பிட்டார்.
போரின் முடிவில் படையினரால் மீட்கப்பட்ட 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் வவுனியா, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் திருகோணமலையில் உள்ள முகாம்களில் வைக்கப்பட்டுள்ளார்கள். இந்த முகாம்களில் உள்ளவர்களின் நலன்களையிட்டு மட்டுமன்றி நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள மக்களினதும் நலன்களையிட்டும் நாம் அக்கறைப்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம். அதனால்தான் இடம்பெயர்ந்த மக்களின் நடமாடும் சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் சமரசிங்க தெரிவித்தார்.
சிறுவர்கள், வயதானவர்கள், கர்பிணித் தாய்மார் உட்பட சுமார் 9 ஆயிரம் பேர் முகாம்களில் இருந்து வெளியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றா��்கள். இதனைவிட மேலும் 14 ஆயிரம் பேர் முகாம்களுக்குள்ளேயே தமது குடும்பத்தினருடன் மீண்டும் இணைவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்திருக்கின்றார்.
முகாம்களில் உள்ள புலிகள் அடையாளம் காணப்பட்டு வேர் அறுக்கப்படும் வரையில் மீள்குடியேற்றம் இல்லை: அமைச்சர் மகிந்த சமரசிங்க
பதிந்தவர்:
தம்பியன்
23 July 2009
0 Responses to முகாம்களில் உள்ள புலிகள் அடையாளம் காணப்பட்டு வேர் அறுக்கப்படும் வரையில் மீள்குடியேற்றம் இல்லை: அமைச்சர் மகிந்த சமரசிங்க