Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

''உலகத் தமிழர்கள், ஜனநாயக சக்திகள், மனித உரிமை அமைப்புகள் ஆதரவோடு மீண்டும் தமிழ் ஈழ விடுதலைப்போராட்டம் தொடங்கும் அதற்கு அனைத்து வகை தியாகத்தையும் செய்ய தமிழர்கள் தயாராக வேண்டும்” என்று உலகத்தமிழர் பிரகடனத்தில் அறிவிக்கப்பட்டது. சென்னையில் இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத்தமிழர் பிரகடன வெளியீட்டு பொதுக்கூட்டம் சென்னை அமைந்தகரையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு நெடுமாறன் தலைமை வகித்தார். பா.ம.க.நிறுவனர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிசார்பில் ஸ்டாலின் குணசேகரன், இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம், பா.ஜ.க.சார்பில் வைத்தியலிங்கம், மா.நடராசன் ஆகியோர் கலந்துகொண்டனர். ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத்தமிழர் பிரகடனத்தை வைகோ வாசித்தார் இதை கூட்டத்தில் கலந்துகொண்ட 5ஆயிரத்திற்கும் அதிகமானோர் திரும்ப வாசித்தனர். அதில் ஈழத்தமிழர்கள் சுதந்திரமாக வாழ அவர்கள் ஒப்புக்கொள்ளும் வகையிலான தீர்வு காணப்படவேண்டும்.

ஈழத்தமிழர்கள் வசித்துவந்த ஊர்களில், அவர்கள் வீடுகளிலேயே அவர்கள் குடியமர்தம் செய்யப்பட வேண்டும். இராணுவத்தினரும், சிங்கள மக்களும் ஆக்கிரமித்துள்ள ஈழத்தமிழர்களுக்கு சொந்தமான பகுதிகளில் இருந்து அவர்களை வெளியேற்றி தமிழர்கள் மீண்டும் குடியேற ஐ.நா.சபை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈழத்தமிழர்கள் பல ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட காரணமான அரசியல்வாதிகள், இராணுவ அதிகாரிகள் மனித உரிமையை மீறியதிற்காக அவர்களை போர்க்குற்றவாளிகளாக அறிவித்து சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றத்தர ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈழத்தமிழர்கள் சுதந்திரமான வாழ்வுரிமை பெற நடைபெற்ற விடுதலைப்போராட்டம் தற்காலிக பின்னடைவிலிருந்து மீண்டுவந்து முன்பை விட தீவிரமாக மீண்டும் முன்னெடுக்கப்பட்டு விடுதலை கிடைக்கும் வரையிலான போராட்டம் நடத்தப்படும். அதில் அரசியல்தீர்வு கான அனைத்து வகை தியாகத்திற்கும் எங்களை ஒப்படைக்கிறோம். உலகத்தமிழர் ஆதரவோடும், உலகம் முழுவதும் உள்ள ஜனநாயக, மனித உரிமை அமைப்புகளின் துணையோடு இந்த விடுதலைப்போராட்டம் மீண்டும் தொடங்கப்படும்.

இதற்காக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை சந்தித்து உலத்தமிழர் பிரகடன விளக்க கூட்டங்கள் நடத்தப்படும். இவ்வாறு உலகத்தமிழர் பிரகடனத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த பிரகடனத்தைவும், தமிழர் வாழ்வுரிமைக்கான உறுதிமொழிகளையும், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கைகளில் தீப்பந்தம் ஏந்தி நின்று வாசித்தனர். தமிழ் ஈழம் மலர தியாகம் செய்ய தயாராவோம் என்று அவர்கள் முழக்கம் எழுப்பினர்.

0 Responses to மீண்டும் தமிழீழ விடுதலைப் போர்: உலகத்தமிழர் பிரகடனத்தில் அறிவிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com