நாம் தமிழர் இயக்கம் 2010ம் ஆண்டில் அரசியல் இயக்கமாக மாறும் என, இயக்குநர் சீமான் தெரிவித்தார்.
இதுகுறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ள தமிழர்களை ஐ.நா. மேற்பார்வையில் அவரவர் வாழ்விடங்களில் குடியமர்த்தக் கோரியும், "நாம் தமிழர் இயக்கம்' சார்பில் ஜூலை மாதம் மதுரையில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தினோம்.
அடுத்ததாக இம்மாதம் 29 ம் தேதி தூத்துக்குடியில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த உள்ளோம்.
தமிழ் இனம், மொழிக்காக போராடுவதற்காக கடந்த மே மாதம் உருவானதுதான் "நாம் தமிழர் இயக்கம்'. சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது இந்த இயக்கம். தமிழ் இனம் மற்றும் மொழியைப் பாதுகாக்க வேண்டும் என்பதுதான் இந்த இயக்கத்தின் நோக்கம் என்றார்
0 Responses to நாம் தமிழர் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறும்: இயக்குநர் சீமான்