Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முகாம்களில் தங்கியுள்ள மக்கள் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் சர்வதேச உதவிகளை இலங்கை அரசு இழக்க நேரிடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ராபர்ட் ஓ பிளாக் இவ்வாறு கூறியுள்ளதாக இலங்கைத் தமிழர் ஆதரவு இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

மேலும், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை உடனடியாக அவர்களது சொந்த இருப்பிடங்களில் குடியமர்த்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்காவிட்டால் அமெரிக்கா உட்பட பல உலக நாடுகளின் நிலையில் மாற்றம் ஏற்படும் என்றும், இதனால் சர்வதேச சமூகத்தின் உதவிகளை இலங்கை அரசு இழக்க நேரிடலாம் என்றும் ராபர்ட ஓ பிளாக் கூறியுள்ளதாக அந்த இணையதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Responses to இலங்கைக்கு அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com