விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிர பாகரன் குறித்த விசாரணைகளை மேற் கொள்வதற்காக, ராஜீவ் காந்தி படுகொலை குறித்து விசாரிக்கும் பல்துறை கண்கா ணிப்பு முகவர் அமைப்பு விரைவில் இலங் கைக்கு வருகை தரவுள்ளது என புதுடில்லி செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த அமைப்பின் செயற்பாடுகளை இந் திய அரசு மேலும் ஒருவருட காலத்திற்கு தடைசெய்துள்ளது.
இந்த அமைப்பின் காலம், கடந்த மே மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த நிலையில் மூன்று மாதத்திற்குப் பின்னர் மீண்டும் அதற்கு ஒரு வருட நீடிப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த நிலையிலேயே பல்துறை கண்காணிப்பு விசாரணை அமைப்பின் அதிகாரிகள் விடுதலைப் புலிகளின் தலைவர் குறித்து ஆராய்வதற்காகவும் மேலதிக தக வல்களை பெறுவதற்காகவும் விரைவில் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜீவ் படுகொலை குறித்து விசாரிக்கும் பல்துறை கண்காணிப்பு முகவர் அமைப்பு விரைவில் இலங்கைக்கு வருகை
பதிந்தவர்:
தம்பியன்
28 August 2009
0 Responses to ராஜீவ் படுகொலை குறித்து விசாரிக்கும் பல்துறை கண்காணிப்பு முகவர் அமைப்பு விரைவில் இலங்கைக்கு வருகை