Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பொதுநலவாய அமைப்பின் வரலாற்றில் ஒருகரும்புள்ளி - நவம்பர் 17ஆம்திகதி முதல் நடைபெற இருக்கும் பொதுநலவாய அமைப்பின்  மகாநாடு சிறிலங்காவில் நடைபெற இருக்கிறது. 1991ஆம்ஆண்டு ஹராரே தீர்மானம் ஊடாக பொதுநலவாய அங்கத்துவ  நாடுகள், மதித்து நடக்கவேண்டிய அடிப்படை தீர்மானங்கள் வரையறுக்கப்பட்டது.

அந்த அடிப்படையில் பாகிஸ்தான், கென்யா  போன்ற நாடுகள் விலக்கிவைக்கப்பட்டது, ஜிம்பாவே நீக்கப்பட்டது, இன்று வரபிஜி விலக்கிவைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இன்று 21ஆம் நூற்றாண்டின் மிகக் கொடிய இனப்படுகொலையை செய்த நாடும், மனிதவுரிமை சபையில் சிறிலங்காவிற்கு எதிராக 2 தீர்மானம் முன்வைக்கப்பட்டபோதும், அதை மதியாமல் தொடர்ச்சியாக இனப்படுகொலையை செய்யும் நாடாகிய சிறிலங்காவில் பொதுநலவாய அமைப்பின் மகாநாட்டை நடாத்தி, அந்த அமைப்பின் தலைமைதுவத்தை 2 வருடத்திற்க்கு சிறி லங்காவிடம் கையளிக்கும் தீர்மானம் மனிதநேயதிட்கும் பொதுநலவாய அமைப்பிற்கும் ஒருகரும்புள்ளி.

அதற்கு உடந்தையாக இந்தியா,  பிருத்தானியா, ஆஸ்திரேலியா, தென்ஆபிரிக்கா, நியூசிலாந்து போன்ற பலநாடுகள்  உறுதுணையாக இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது . அத்துடன் ஆஸ்திரேலியா நாட்டை நோக்கி தமது உயிர்களைபணயம்வைத்து மீன்பிடி படகுகளில் பாதுகாப்பு தேடி செல்லும் தமிழீழமக்களை காட்டுமிராண்டிகள் போல் நடாத்தும் ஆஸ்திரேலியா போன்ற மனிதநேயம் அற்ற செயல்பாடுகளை கண்டிக்கவேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.

கனடா சிறிலங்காவில் பொதுநலவாய மகாநாடு நடத்துவது அந்த அமைப்பே கலங்கப்படுத்துவது போலாகும் என்று கூறி கனடா இந்த மகாநாட்டை பகிஸ்கரிக்க நேரிடும் என்று கூறிய போதும், இந்தியா அரசின் சூழ்ச்சியால் இந்த மாகாநாடு சிறிலங்காவில் நடைபெற இருக்கிறது.

இதை கண்டித்து பிரான்சில், பாரிஸ் நகரில் ஜூலை 31 முதல் வாரம் தோறும் புதன் கிழமைகளில் ஆஸ்திரேலியா, பிருத்தானியா, தென்ஆபிரிக்கா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் தூதராலயம் முன்ஜூலை 31 , ஆகஸ்ட் 7, ஆகஸ்ட் 14, ஆகஸ்ட் 21 ஆகிய நாட்களில் மாலை 3 மணிமுதல்  கண்டன கவனயீர்ப்பு போராட்டங்களை பிரான்சு  தமிழீழமக்கள் பேரவை ஒழுங்குசெய்கிறது.

இந்த போராட்டங்களில் நாம் ஈழத்தமிழர்கள் பொதுநலவாயநாடுகள், புவியல்அரசியலை புறந்தள்ளிவிட்டு, மக்கள் உரிமைகளை பாதுகாக்கும், சர்வதேச மக்களை பாதுகாக்கும் சட்டமாகிய  R2P வலியுறுத்த வேண்டும், இல்லையேல் ஒரு இனம் அழிவதற்கு நீங்களும் உடந்தையாகிவிடுவீர்கள் என்பதையும்  2ஆம் உலகபோறுக்கும் பின் மாபெரும் இனப்படுகொலைக்கு சர்வதேசம் உடந்தை என்பது சரித்திரத்தில் எழுதப்படும் என்பதை உரக்ககூறுவோம்.

- தமிழீழமக்கள்பேரவைபிரான்சு.


0 Responses to பொதுநலவாய அமைப்பின் மகாநாடு சிறிலங்காவில் நடைபெற ஆஸ்திரேலியா ஆதரவளிப்பதைக் கன்டித்து கன்டனப் போராட்டம். - பிரான்சு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com