தமிழர்களை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்து கொலை செயத் செயலைக் கண்டித்து கரூர் நீதி மன்றம் முன்பு வழக்கறிஞர்கள் இலங்கை தேசிய கொடியை செருப்பால் அடித்து, தீ வைத்து எரித்தனர்.
இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் போர் முடிந்த நிலையில் அப்பாவி தமிழர்களை பாதுகாப்பு வளைத்திற்குள் வைத்து இலங்கை ராணுவம் நிர்வாணப்படுத்தி கொடுமை செய்து படுகொலை செய்து வருவதாக தமிழ் ஈழ ஆதரவாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கையில் உள்ள ராணுவ வதை முகாமில் தமிழ் இளைஞர்களை கடத்திச் சென்று நிர்வானமாக்கி, தலையில் சுடும் காட்சிகளை லண்டனில் உள்ள சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டிருந்தது. இந்த காட்சிகள் தமிழ் உணர்வாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இலங்கை ராணுவத்திற்கு தங்களது கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் கரூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இலங்கை வழக்கறிஞர் சங்க துணைத் தலைவர் ரமேஷ் தலைமையில், வழக்கறிஞர்கள் செயலாளர் நடேசன், இராஜேந்திரன், நன்மாறன் முன்னிலையில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இலங்கை தேசிய கொடியை செருப்பால் அடித்து தீ வைத்து கொளுத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
0 Responses to கரூரில் இலங்கை தேசிய கொடி எரிப்பு