இலங்கையில் உள்ள ராணுவ வதை முகாமில் ஈழத்தமிழர்களை கடத்திச் சென்று நிர்வானமாக்கி, தலையில் சுடும் காட்சிகளை லண்டனில் உள்ள சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டிருந்தது.
9 தமிழர்கள் நிர்வாண நிலையில் சுடப்பட்டு கிடக்கும் கோர காட்சியையும், ஒரு ஈழத்தமிழ் வாலிபரை கேலி செய்து பூட்ஸ் காலால் எட்டி உதைத்து விட்டு, பிறகு தலையில் சுடுவதையும் செல்போன் காமிரா மூலம் படம் பிடித்துள்ளனர்.
இலங்கை அரசு இந்த காட்சிகளை போலியானது என்று அறிவித்துள்ளது. இது குறித்து லண்டன் பிபிசி தொலைக்காட்சி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை தொடர்பு கொண்டு கருத்து கேட்டதற்கு பதில் அளித்த அவர்,
ஈழத்தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக வெளியான தொலைக்காட்சி ஒளிபரப்பு குறித்து இந்திய அரசு அதிக கவனம் செலுத்தி உள்ளது. இது பற்றி முழுமையாக விசாரிக்கப்படும். மத்திய வெளியுறவு அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தர உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
நன்றி, நக்கீரன்.
ஈழத்தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட காட்சிகள் பற்றி மத்திய அரசு விசாரணை நடத்தும்: எஸ்.எம். கிருஷ்ணா
பதிந்தவர்:
தம்பியன்
27 August 2009
0 Responses to ஈழத்தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட காட்சிகள் பற்றி மத்திய அரசு விசாரணை நடத்தும்: எஸ்.எம். கிருஷ்ணா