இலங்கை தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் ஆதரவாக டெல்லியில் உண்ணாவிரம் இருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியையும் லட்சிய திமுக தலைவர் விஜயகாந்த் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விஜய டி.ராஜேந்தர்,
இலங்கையில் 3 லட்சம் தமிழர்கள் முள் வேலிக்குள் அகதிகளாய் முடங்கிக் கிடக்கிறார்கள். அவர்களை காப்பாற்றுவதை விட்டுவிட்டு காஞ்சியில் தனக்குத் தானே விருதை கொடுத்துக்கொண்டு மாநில சுயாட்சி என முழங்கும் முதல்வர் கருணாநிதியின் இந்த செயல்தான் அண்ணாவின் கொள்கையா?
போல்டுமேன் என்று பட்டம் வாங்க வேண்டிய திமுக அமைச்சர்கள் கருணாநிதி கொடுக்கும் கடிதத்தை எடுத்துச் செல்லும் போஸ்ட் மேன்களாக பணிபுரிகிறார்கள். பிரதமருக்கு கடிதம் எழுதுகிறேன் என்று சொல்வதை நிறுத்திவிட்டு, மத்திய அரசுக்கு கடிவாளம் போட முன்வருவாரா?
மேலும் டெல்லியில் உண்ணாவிரதம் இருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோரை நான் பாராட்டுகிறேன். என்னால் அங்கு சென்று போராட முடியாவிட்டாலும் இங்கு இருந்து கொண்டு போராடுவேன்.
இலங்கை தமிழர்களுக்காக மாநில சிறுசேமிப்பு துறை தலைவர் பதவியை தூக்கி எறிந்தேன். ஆனால் திமுகவோ ஒரு கவுன்சிலர் பதவியைகூட இழக்கவில்லை. இதுதான் உண்மை நிலவரம். தமிழகத் தலைவர் என்று கூறிக்கொள்ளும் திமுக தலைவைர் கருணாநிதியின் எண்ணத்தை மக்கள் நன்கு அறிவார்கள் என்றார்.



0 Responses to விஜயகாந்த்தை டி.ராஜேந்தர் பாராட்டு