Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

237 பாராளுமன்ற உறுப்பினர்களை முன்மொழிந்துள்ள புதிய தேர்தல் சீர்திருத்தத்தினை உள்ளடக்கிய 20வது திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதன் பிரகாரம் தற்போது 225 ஆக காணப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 237 ஆக  (தொகுதிவாரி 145, விருப்புவாக்கு 55, தேசியப்பட்டியல் 37) அதிகரிக்கவுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு வெளியாகலாம் என்று தெரிகின்றது.

அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டமாக வரவுள்ள தேர்தல் சீர்திருத்தம் மீதான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்கான விசேட அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றபோதே இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

0 Responses to புதிய தேர்தல் சீர்திருத்தம்; 237 ஆசனங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com