ஜனவரி மாதம் 26ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் சுதந்திரா கட்சி சார்பில் மகிந்த ராஜபக்சேயும் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவும் போட்டியிடுகின்றனர்.
தேர்தலில் ஈழத்தமிழர்களின் ஓட்டுக்களை பெற ராஜபக்சேயும் பொன்சேகாவும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் ஆதரவை கூட ஏற்பேன் என்று பொன்சேகா கூறி உள்ளார்.
அவர் தேர்தலில் அன்னப்பறவை சின்னத்தை தேர்வு செய்துள்ளார். இதற்கிடையே தமிழர்கள் சார்பிலும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை நிறுத்த பரிசீலிக்கப்பட்டது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனும் இது தொடர்பாக சந்தித்து பேசினார்கள். அப்போது தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு தேர்தலில் தமிழர் ஒருவரை நிறுத்த தீர்மானிக்கப்பட்டது.
தமிழ் மக்கள் சார்பில் போட்டியிட தமிழ் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனுக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சம்பந்தன் பெயர், வேட்பாளருக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஜனநாய மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுடன் ஆலோசித்த பிறகே இது தொடர்பாக இறுதி முடிவெடுக்கப்படும் எனவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது

0 Responses to சம்பந்தன் தேர்தலில் போட்டி?