ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்வதற்கு வாழைச்சேனை கடற்கரைக்கு ஒரு கூட்டத்தினர் வருகிறார்கள் என்ற கிடைத்த தகவலை அடுத்து அங்கு சென்ற சிறிலங்கா இராணுவத்தினர் துப்பாக்கிப்பிரயோகம் செய்ததில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஒருவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றதாக சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் கருணாரட்ண தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனை கடற்கரையில் இரகசியாமான ஒரு பகுதியில் கூடவுள்ள சிலர் ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக பயணம் செய்யவுள்ளனர் என்று கும்புறுமலை பிரதேச இராணுவத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, அப்பகுதிக்கு விரைந்த இராணுவத்தினர் அப்பகுதியில் நின்றுகொண்டிருந்த சிலரை நோக்கி அனைவரையும் அங்கேயே நிற்கும்படியும் ஓடவேண்டாம் என்றும் உத்தரவிட்டுள்ளனர். அப்போது, அப்பிரதேசத்திலிருந்து தப்பியோட முயன்ற கூட்டத்தினர் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஒருவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பகுதியிலிருந்து 29 உயிர்காக்கும் அங்கிகளையும் இரண்டு எரிவாயு கொள்கலன்களை மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் வாழைச்சேனை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

0 Responses to ஆஸ்திரேலியா செல்லவிருந்தவர்கள் மீது சிறிலங்கா இராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு! ஒருவர் பலி!!