Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இறுதியாக நடைபெற்ற பெரும் பேரழிவின்போது 20 000 இற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக முன்னர் தகவல் வெளிவந்த நிலையில் அதற்கு பின்னர் 2500 இற்கு மேற்பட்டோர் காணாமல் போனதற்கான ஆவணரீதியான தகவல் வெளிவந்திருப்பது தமிழ்மக்களின் இடர்நிலையை வெளிக்காட்டுவதாக உள்ளது.

இந்த ஆவணத்தில் யுத்தம் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து வந்த சமயத்தில் கைது செய்யப்பட்டு கொண்டுசெல்லப்பட்டவர்கள், அரசாங்கத்தால் நடத்தப்படும் முகாம்களில் இருந்த சமயத்தில் காணாமல் போனவர்கள் ஆகியோர் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

உறவினர் கொடுத்த புகார் மனுக்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்துவருவதாக காணாமல் போனோரைத் தேடியறியும் குழு என்ற அமைப்பு தெரிவிக்கின்றது. அக்குழுவின் பிரதிநிதியான மகேந்திரன் மேலும் இதுபற்றி தெரிவிக்கையில் ஆனந்தகுமாரசாமி தடுப்பு முகாமிலிருந்தும் இராமநாதன் தடுப்பு முகாமிலிருந்தும் கிடைத்த முறைப்பாடுகளே அதிகமானதென தெரிவித்தார்.

இம்முறைப்பாடுகளில் 18 வயதிற்குட்போர் அண்ணளவாக 200 பேர் என்றும் பெண்களின் எண்ணிக்கை 500 வரையென்றும் அவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கை கூறுகிறது.

0 Responses to 2500 பேரை வவுனியா முகாமிலிருந்து காணவில்லை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com