Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நமது மக்கள் சிங்கள - பவுத்த மேலாண்மையில் இருந்து விடுதலை பெற எமக்குள்ள தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமைகளின் அடிப்படையில் சுதந்திர இறைமையுள்ள தமிழீழ அரசை மீட்டளித்து மீள் உருவாக்கித் தமிழ்த் தேசிய இனத்தின் இருக்கையைப் பாதுகாப்பது தவிர்க்க முடியாதென வட்டுக்கோட்டைத் தீர்மானம் 1976 ஆம் ஆண்டு உலகுக்கு முரசறைந்ததது என கனேடிய தமிழர் படைப்பாளிகள் கழகம் விடுத்துள்ள அறிக்கை தெரிவிக்கிறது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தனித் தமிழீழ அரசே இனச்சிக்கலுக்கு ஒரே அரசியல் தீர்வு என்கிற பிறப்புரிமைக் கோட்பாட்டை முன்வைத்து அய்க்கிய தமிழர் விடுதலைக் கூட்டணி 1977 ஆம் ஆண்டு யூலை 21 ஆம் நாள் நடந்த பொதுத்தேர்தலில் 23 தொகுதிகளில் போட்டியிட்டு 18 தொகுதிகளில் வெற்றி பெற்று மக்கள் ஆணையைப் பெற்றது.

அந்த ஆணையை மீள் உறுதி செய்வதற்காகவே புலம்பெயர் நாடுகளில் வாக்குக் கணிப்பு நடத்தப்பட்டு வருகின்றன. எனவே கனடாவில் நாளை டிசெம்பர் 19 சனிக்கிழமை நடைபெறும் வாக்குக் கணிப்பில் உணர்வுள்ள உறவுகள் நூற்றுக்கு நூறுவிழுக்காடு கலந்து கொண்டு தங்கள் வரலாற்றுக் கடமையை நிறைவேற்றுமாறு தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் அன்போடும் உரிமையோடும் மீண்டும் கேட்டுக்கொள்கிறது.

0 Responses to வரலாற்றுக்கடமையை செய்யுமாறு கனேடிய படைப்பாளிகள் கழகம் அறிக்கை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com