
வசாவிளான் இராணுவ மருத்துவமனையில் கடமையாற்றிய கோப்ரல் தரத்தைச் சேர்ந்த படையினர் ஒருவர் தனக்கு நஞ்சு மருந்தை ஏற்றி தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்தவர் ஆர்.பி.டீ.பி.ரத்னமலல என அடையாளம் காணப்பட்டள்ளார். இவரது உடலம் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் மருத்துவமனை கழிப்பறையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை இராணுவ முகாமைச் சேர்ந்த இரண்டாம் லெப்ரினன்ட தர படையினர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.45 மணியளவில் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தற்கொலை செய்தவர் பி.டி.த சில்வா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேற்படி தற்கொலைக்கான காரணங்கள் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Responses to யாழ்ப்பாணத்தில் சிறீலங்காப் படையினர் இருவர் தற்கொலை!