Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரச தலைவர் மகிந்தவின் தேர்தல் பிரசார செலவு ஆயிரம் கோடி ரூபாவுக்கு அதிகம் என்றும் ஏற்கனவே திட்டமிட்டுள்ள இந்த செலவு மேலும் அதிகரிக்கலாம் என்றும் ஜே.வி.பி. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த செலவை விட மகிந்தவின் மகன் நாமல் ராஜபக்ச தனது தந்தையின் தேர்தல் வெற்றிக்காக 325 கோடி ரூபா செலவில் பிரசாரங்களை முன்னெடுத்துவருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தற்போது அரச தலைவர் மகிந்தவின் 15 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையிலான பதாகைகள் கட்டப்பட்டுள்ளன. இன்னும் 75 ஆயிரம் பதாகைகளை கட்டுவதற்கும் 50 லட்சம் சுவரொட்டிகளை ஒட்டுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த பிரசார செலவுகளுக்காக சிறிலங்கா துறைமுக அதிகாரசபை, பெற்றோலியம் கூட்டுத்தாபனம், அரச பொறியியலாளர் திணைக்களம் உட்பட பல நிறுவனங்களிடம் நன்கொடை பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

இவற்றை விட, அமைச்சர்கள் தனியாக பிரசாரங்களை மேற்கொள்வதற்கென பலகோடி ரூபா பணத்தை செலவிட்டுவருகின்றனர். அரசதலைவரின் கொழும்பு, கண்டி, அனுராதபுரம் இல்லங்களில் தொடர்ச்சியான சந்திப்புக்கள் மற்றும் அவர்களுக்கான விருந்துகள் என பலகோடி ரூபாவும் -

பிராரத்தில் ஈடுபடும் வாகனங்களுக்கான எரிபொருள் மற்றும் ஓட்டுனர்களுக்கான ஊதியம் என்று இன்னும் பலகோடி ரூபாவும் தாராளமாக செலவிடப்படுவதாகவும் - அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

0 Responses to மகிந்தவின் தேர்தல் பிரசார செலவு ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com