Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் அரசதலைவர் தேர்தலில் தான் தோல்வியடைந்தால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரத்தைக் கைப்பற்ற சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு இடமளிக்க வேண்டாம் என்று அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் அரசதலைவர் மகிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் வைத்து கூறியிருப்பதாக அரசதரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

குருணாகல் மாவட்டத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான சாலிந்த திஸாநாயக்க, எஸ்.பீ.நாவின்ன, ஜயரத்ன ஹேரத் போன்ற அமைச்சர்கள் அண்மையில் முன்னாள் அரசதலைவர் சந்திரிகாவையும் மங்கள சமரவீரவையும் சந்தித்துள்ளதாக ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ அரசதலைவர் மகிந்தவிடம் தெரிவித்ததை அடுத்து மகிந்த இதனைக் கூறியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

முன்னாள் அரசதலைவர் சந்திரிக்கா சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் மற்றும் அமைப்பாளர்கள் சிலரை தனது இல்லத்திற்கு அழைத்து கலந்துரையாடியிருப்பதாகவும் தேர்தலுக்குப் பின்னர் அந்தக் குழுவினர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரத்தைக் கைப்பற்ற திட்டமிட்டிருப்பதாகவும் மகிந்தவுக்கு தகவல்கள் கிடைத்திருப்பதாக அலரி மாளிகைத் தரப்புத் தகவல்கள் மேலும் தெரிவித்தன.

0 Responses to தான் தோற்றாலும் சுதந்திரக்கட்சியை கைப்பற்ற சந்திரிகாவை அனுமதிக்கவேண்டாம் என்று மகிந்த கோரிக்கை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com