
இந்தியா செல்வதற்கு ஆறு மாதங்கள் வீசாவை வழங்கியது மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகம். அத்தோடு புறப்பட்ட என் தாயார் விமானத்தில் இருந்து இறங்க முடியாதவாறு தடுத்து வைக்கப்பட்டு, பின் வந்த விமானத்திலேயே மலேசியா திருப்பி அனுப்பப்பட்டுவிட்டதையும் அறிந்து பெரும் மனவருத்தமடைந்தேன் என்றும் கூறினார்.
எனது தாயார் ஏற்கெனவே நீண்ட நாட்கள் இந்தியாவில் இருந்தவர். தற்போது அவர் மருத்துவ சிகிச்சைகளுக்காகவே அங்கு செல்ல இருந்தார். இராணுவ முகாமில் சிறையிருந்து நினைவுமறதி உண்டாகியுள்ள எனது தாயாருக்கு இப்போது ஞாபகசக்தி மிகவும் குன்றியுள்ளதாக தெரிவித்தார்.
தனது தாயார் சுகயீனமான ஒருவர் என்றும் வீசா எடுத்துவந்த ஒருவரின் நம்பிக்கை இப்படியாகக் குலைக்கப்பட்டுள்ளமை நோயாளி என்ற கோணத்தில் மிகவும் கவலைக்குரிய செயல் என்றும் கூறினார். அதேவேளை தற்போது அவருக்கு ஒரு மாதகால வீசா மலேசியாவில் வழங்கப்பட்டுள்ளது. தற்போது அவர் ஒரு மாத காலம் மலேசியாவில் நிற்க முடியும் என்றும் கூறினார்.
குறிப்பு: இதுபற்றி எந்தவித பிரக்ஞையும் இல்லாமல் செம்மொழி மாநாட்டுக்கு ஈழத் தமிழ் அறிஞர்கள் பல நாடுகளில் இருந்தும் புறப்படுவது கவனிக்கத்தக்கது. இந்த விடயத்தை புலம் பெயர் தமிழர் ஊடகங்களில் பலர் கேட்பதையும் பரவலாகக் காண முடிகிறது.
0 Responses to ஆறுமாத வீசாவை வழங்கிவிட்டு திருப்பியனுப்பியுள்ளார்கள் வேலுப்பிள்ளை மனோகரன் கவலை