ஜனாதிபதித் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வெற்றி வாய்ப்பு உண்டென்ற விமர்சனங்களும், ஆரூடங்களும் தோற்றுப் போய், சரத் பொன்சேகாவையும் சிறைக்குள் தள்ளிவிட்ட பின்பு பொதுத் தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசு தோற்கும் என எவரும் கற்பனை செய்ய முடியாது. எனவே தேர்தல் முடிபுகள் எதிர்பார்க்கப்பட்ட வண்ணம் அமைந்துள்ளன. ஆகவே இது பற்றி வியாக்கியானங்கள் நேரமினக்கேடு என்பதால் அதனை அப்படியே விட்டுவிடலாம்.
ஆனால் அதேநேரம், ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றியடைவதற்கும், தென்பகுதி மக்கள் யாழ்ப்பாணத்துக்கு வந்து செல்வ தற்குமிடையே நெருங்கிய நேர்கணியத் தொடர்பு உண்டென்பது மறுதலிப்பதற்குரியதல்ல. இலட்சக் கணக்கான தென்பகுதி மக்கள் யாழ்ப்பாணத்துக்கு வந்து சென்று விட்டனர். இன்னும் பல இலட்சக் கணக்கில் வரவும் உள் ளனர். இவ்வாறு வருகின்றவர்கள் தென்பகுதியி லுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் யாழ்ப்பாண நகரம், கந்தரோடை, நயினா தீவு ஆகிய இடங்களுக்குச் செல்வதற்கு வழிப் படுத்தப்படுகின்றனர். இலங்கைத் தேசத்தில் வாழ்கின்ற எவரும் நாட்டின் எந்தப் பாகத்திற்கும் செல்வதற்கும், பார்வையிடுவதற்கும் உரிமையுடையவர்கள். இதில் இரு வேறு கருத்திற்கிடமில்லை. ஆனால் எங்கள் இனத்திற்கு மட்டுமே இந்த மண் சொந்தம் என்ற வக்கிரத்துடன் வலம் வருவ தென்பது அவ்வளவு ஆரோக்கியமானதல்ல.
இந்த துரதிர்ஷ்ட நிலையை யாழ்ப்பாணத் துக்கு வருகின்ற சிங்கள மக்களிடம் காண முடி கின்றது. தென்பகுதி கிராமத்துச் சிங்கள மக் கள் தமிழர்களின் பூர்வீக இடமான யாழ்ப்பா ணத்தைத் தங்களின் பூர்வீகம் என்று எண்ண வைப்பது தமிழினத்தை வதைப்பதாகும். இதனை ஆட்சியாளர்கள் தடுத்து நிறுத்தா விட்டால், இனவாத சிந்தனை அழிக்க முடியாத பயங்கரமாக உருவெடுக்கும் என்பது நிறுத்திட்ட மான உண்மை.
0 Responses to சிங்கள இனத்தால் தமிழர் மனத்தால் நோகலாமோ?