
வடமேற்கு லண்டனில் உள்ள ரைய்சிலிப் பகுதியில் உள்ள ஹவாட் ஹவுஸ் மண்டபத்தில் இந்த நினைவு வணக்க நிகழ்வு நடைபெற்றது. 23-05-2010 ஞாயிறு மாலை 8:00மணிக்கு ஆரம்பமான இந்த நினைவுவணக்க நிகழ்வில் முன்னாள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தற்போதய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினருமான திரு. சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி அவர்கள் ஈகைச்சுடரினை ஏற்றி பிரிகேடியர் பால்றாஜ் அவர்களின் நினைவுருவப்படத்திற்கு மலர்மாலையினை அணிவித்தார்.
அதனைத்தொடர்ந்து லெப்ரினன் கேணல் சிரித்திரனின் சகோதரியான சிவமலர் கோகேஸ்வரன் அவர்கள் பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் நினைவுருவப் படத்திற்கு மலர்மாலையினை அணிவித்தார்.
மலர்மாலை அணிவிப்பை அடுத்து இதுவரை காலமும் போரினால் கொல்லப்பட்ட மக்களுக்கும், மாவீரர்களுக்குமாக அகவணக்கம் செலுத்தப்பட்டது. அகவணக்கத்தை தொடர்ந்து மக்கள் வரிசையாக சென்று மலர் அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்வில் கவிஞர் ராஜமனோகரன் அவர்களின் உரையும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானிய பிரதிநிதி திரு. ஜெயானந்தமூர்த்தி அவர்களின் உரையும் இடம்பெற்றது. அத்தோடு பிரிகேடியர் பால்றாஜ் நினைவுப் பாடலும், கவிதைகளும் இடம்பெற்றன. பிரித்தானிய ஐக்கிய செயற்பாட்டுக் குழுவினால் ஒழுங்குசெய்யப்பட்ட இந்த நினைவுவணக்க நிகழ்வில் பெருமளவான மக்கள் வந்து கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.







0 Responses to லண்டனில் நடைபெற்ற பிரிகேடியர் பால்றாஜ் நினைவுவணக்க நிகழ்வு