Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாடு கடந்த தமிழீழ அரசவைக்கு பிரதிநிதிகளை தெரிவு செய்யும் பொருட்டு ஆஸ்திரேலியாவில் நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த 22 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையகம் வெளியிட்டுள்ளது. இதன்பிரகாரம், நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்துக்கு ஒதுக்கப்பட்ட நான்கு ஆசனங்களுக்கு சஞ்சயன் குலசேகரம், சிறிபாலன் சேரன், குணசிங்கம் தர்ஸன், பாலசிங்கம் பிரபாகரன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த முடிவுகளை அடுத்து, நாடு கடந்த தமிழீழ அரசவைக்கான ஆஸ்திரேலிய பிரதிநிதிகள் தெரிவு நிறைவுபெற்றிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் ஐந்து தொகுதிகளிலிருந்து பத்து பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு வேட்புமனுக்கள் கோரப்பட்டிருந்தன. நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்தை தவிர ஏனைய இடங்கள் அனைத்திலும் போட்டியின்றி ஆறு பேர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

விக்டோரிய மாநிலத்தில் துரைசிங்கம் சண்முகநந்தகுமார், டொமினிக் சந்தியாப்பிள்ளை, பாலச்சந்திரன் ஜனனி ஆகியோரும் குவின்ஸ்லாந்து மாநிலத்தில் இளையதம்பி செல்வநாதனும் கன்பரா மற்றும் தஸ்மேனியா இணைந்து தொகுதியில் விஸ்வநாதன் அபிராமியும் மேற்கு - தெற்கு ஆஸ்திரேலிய மாநிலங்கள் மற்றும் வட பிராந்தியம் அடங்கிய தொகுதியிலிருந்து மாணிக்கவாசகர் கனனேந்திரம் ஆகியோரும் முன்னர் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நியூ சவூத் வேல்ஸ் மாநில தேர்தல் முடிவுகளை ஆஸ்திரேலியாவுக்கான செயற்பாட்டுக்குழு நாடு கடந்த தமிழீழ அரசின் செயலகத்துக்கு அனுப்பிவைத்து அந்த முடிவுகள் விரைவில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் நியூ சவூத் வேல்ஸ் மாநில தேர்தல் மிகவும் சுமூகமாக நடைபெற்றது என்றும் தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.

0 Responses to நாடு கடந்த தமிழீழ அரசு தேர்தல்: நியூ சவூத் வேல்ஸ் மாநில முடிவுகள் அறிவிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com