Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈழத்தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் இனப்படுகொலையை உலக மக்களுக்கு தெளிவுபடுத்தும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று விமானம் மூலம் மேற்கொண்டுள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

சிறீலங்கா அரசே தமிழ் மக்கள் மீதான படுகொலைகளை நிறுத்து, சிறீலங்காவை புறக்கணிப்போம்என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை சிறிய விமானம் மூலம் வானில் இழுத்து சென்று உலக மக்களின் கவனங்களை கவரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று புளோறிடாவில் நடைபெற்றுள்ளது.

இந்தியா, பாகிஸ்த்தான், பிரித்தானியா, தென்ஆபிரிக்கா, சிறீலங்கா மற்றும் கரிபியன் நாடுகளின் விளையாட்டு வீரர்களும், பார்வையாளர்களும் குழுமியிருந்த துடுப்பாட்ட மைதானத்தின் வான்பரப்பில் இந்த கவனயீர்ப்பு நிகழ்வு கடந்த வார இறுதியில் இடம்பெற்றுள்ளது.

மேலும் தற்போதைய சிறிலங்கா அரசை எதிர்க்கும் சிங்கள இனத்தவர்கள் மற்றுமொரு சிறிய விமானம் மூலம்பொன்சேகாவை விடுதலைசெய், ஜனநாயகத்தை நிலைநாட்டுஎன்ற வாசகங்களை கொண்ட கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

0 Responses to அரசின் இனப்படுகொலை: விமானம் மூலம் கவனயீர்ப்பு போராட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com